​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"நடமாடும் மருத்துவமனை" வாகனங்கள் மூலம் கிராமம் தோறும் முருத்துவ சேவை.. தொடங்கிவைத்தார் முதலமைச்சர்..

Published : Apr 08, 2022 10:44 AM

"நடமாடும் மருத்துவமனை" வாகனங்கள் மூலம் கிராமம் தோறும் முருத்துவ சேவை.. தொடங்கிவைத்தார் முதலமைச்சர்..

Apr 08, 2022 10:44 AM

தமிழகத்தில் கிராமம் தோறும் சென்று மருத்துவ சேவை வழங்கும்  நடமாடும் மருத்துவமனை வாகனங்களை சென்னை காமராசர் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இரத்தம் , சளி , சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான ஆய்வக வசதியுடன் கூடிய இவ்வாகனங்களில் தலா ஒரு மருத்துவர் , செவிலியர் , மருத்துவப் பணியாளர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.

கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை , காச நோய் , நீரிழிவு நோய்களுக்கான சிகிச்சை உட்பட அடிப்படை சிகிச்சைகளை வழங்கும் விதமாக அமைந்துள்ள 389 வாகனங்களை முதலமைச்சர் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.